பக்கம்:நலமே நமது பலம்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 215

போதிய கண்காணிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் பக்கத்தில் இருந்தால், அவ்வப்போது அவற்றினைச் சுட்டிக் காட்டலாம். மீறினால் தேவையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் தடுக்கலாம். தண்டிக்கலாம்.

2. தேவையான விளையாட்டுப் பொருட்களையும் கருவிகளையும் நல்ல தரமுள்ளதாக வாங்கி, அவற்றைத் தக்க முறையில் பராமரித்து வரவேண்டும்.

3. குறிப்பிட்ட விளையாட்டை விளையாடுவதற்கு முன்னர், இன்னின்ன முறையில் ஆடினால் இன்பமாக இருக்கும்; இந்த முறையில் ஆடக் கூடாது என்றவாறு குறிப்புக்களைக் கொடுத்து விட வேண்டும்.

இந்த விளையாட்டுப் பற்றிய அறிவினை, மாணவர்கள் வளர வளர பயிற்சியாலும் பழக்கத்தாலும் அதிகமாக வளர்த்துக் கொள்வார்கள்.

4. பங்கு பெறுகின்ற மாணவர்கள் அந்தந்த விளை யாட்டுக்கேற்ற பாதுகாப்புக் கருவிகளை அணிந்து கொண்டுதான் ஆட வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பழக்க வேண்டும். (உ-ம்) கிரிக்கெட் ஆடும் முன்னர் அதற்குரிய கையுறை, காலுறை, காலணி, அடிவயிற்றுக் காப்பான் (Abdomon Guard) முதலியவற்றை அணிவது போல.

5. விளையாட்டுக்குரிய முக்கியமான வழிகள் விளக்கப்பட வேண்டும். அதனால் தவறாக ஆடும் முறைகளும் வீணான தகராறுகளையும் தவிர்க்கின்ற நல்ல சூழ்நிலை அமையும்.