பக்கம்:நலமே நமது பலம்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


216 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

6. பெரியவர்கள் விளையாடுகின்ற ஆட்டங்களை இளையவர்கள் ஆடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

7. முடிந்தவரை (மூக்குக்) கண்ணாடி அணிந்து கொண்டு மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

8. விளையாடும் மைதானம் அன்றாடம் சுத்தப்படுத்தப் பட வேண்டும். கண்ணாடித் துண்டுகள், கூரிய கட்டைகள், கற்கள், முட்கள் மற்றும் துன்பம் தரக்கூடிய அளவுக்குள்ள பொருட்களை மைதானத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். தாண்டிக் குதிக்கும் மணற்பரப்பில் மேற்கூறிய பொருட்கள் உள்ளனவா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்த்து வைப்பது நல்லது.

ஏனெனில், மணற்பரப்பில் கூரிய சிறு சிறு கல், கிளிஞ்சல், முள் போன்றவைகள் நிறையக் கிடக்க வாய்ப்புண்டு.

9. விளையாடப் பயன்படும் பொருட்கள் பழுதாகி இருக்க வாய்ப்புக்கள் உண்டு. அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து விடுவது சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

10. விளையாடும் மைதானம் முழுவதும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சமன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். -

11. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு விதிகள் பற்றிய ஞானத்தை வளர்த்து விடவேண்டும். அவர்கள் புரிந்து கொண்டுவிட்டால், பாதுகாப்பு முயற்சியில் பாதி அளவு எளிதான வெற்றி தானே!