பக்கம்:நலமே நமது பலம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒரு மனிதர் பிறப்பால் பெறுகிற ஒவ்வொரு குணாதிசயத் திற்கும், ஒரு ஜோடி ஜீன்கள் பொறுப்பாக இருக்கின்றன. அந்த ஜோடி ஜீன்களானது தந்தை செல்லில் இருந்தும் தாய் செல்லில் இருந்தும் ஒவ்வொன்றாக வந்து ஜோடியாகிக் கொள்கின்றன.

இப்படி இணைகிற ஜீன்களிலிருந்துதான் உரு வெடுக்கும் மனித தேகம், குறிப்பிட்ட குணாதிசயங்களைப் பெற்றுப் பிறக்கிறது என்றால், இந்த விஷயம் இயற்கைக்கு உட்பட்டது. இறைவன் ஆணைக்குட்பட்டது என்பதுதான்

2_600T60) LD.

இப்படி இணைகிற இரண்டு ஜீன்களைத் தடுப்பதோ, மாற்றி வைப்பதோ முடியாத விஷயம். அதனால்தான் பரம்பரைக் குணம் என்பது மாறிப் போகாமல் மறைந்து விடாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

புதிதாக ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அது அதன் பெற்றோர் அல்லது முன்னோர்களின் குணங்களைக் கொண்டுதான் பிறக்கிறது என்று நாம் முன்னரே கூறியிருக்கிறோம்.

உயரம், எடை, தோலின் நிறம், கண்களின் அமைப்பும் நிறமும், தலைமுடி, நடத்தை, அறிவுக் கூர்மை போன்ற குணாதிசயங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றன.

இவற்றைப்போலவே இரத்த அழுத்தநோய், நீரிழிவுநோய், ஆஸ்துமா, கேன்சர் போன்ற நோய்களும் சில மனநோய் வகைகளும் கூட பரம்பரை வியாதிகளாகத் தொடர்கின்றன.

இதுபோலவே வந்த நோய்களுக்குத் தாக்குப் பிடிக்கக்

கூடிய எதிர்த்து நிற்கிற தன்மைகளும் கூடப் பரம்பரை காரணமாகத் தொடர்கின்றன.