பக்கம்:நலமே நமது பலம்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

30. உள்ளாடும் அரங்கத்தில் பாதுகாப்பு

உள்ளாடும் அரங்கம் அல்லது விளையாட்டு மண்டபம் (Gymnasium) என்று அழைக்கப்படும் இவ்விடத்தில், பனி, மழை, குளிர் போன்ற இயற்கையின் எதிர்ப்பையும் சமாளித்து விளையாடுதற்கேற்ற வழி ஏற்படுத்தித் தந்து ஊக்குவிக்கும்

உயர் பண்பைக் காணலாம்.

விளையாட்டுக்களில் நேர்கின்ற விபத்துக்களை விட, இடம் குறுகியதாக நான்குபுறச் சுவர்களுக்கு மத்தியில் பலர் கூடி விளையாடும்போது, எதிர்பாராத இடர்கள் நேர்வது இயல்புதான். அதை முன்னரே எதிர்பார்த்து, அதற்கேற்ப நடந்து கொள்வதில்தான் புத்திசாலித் தனம் அடங்கியிருக் கிறது.

ஆகவே, உள்ளாடும் அரங்கத்தில் விபத்து நேராமல் தடுத்துக் கொள்ளும் தக்க நடவடிக்கைகளும் தற்காப்பு முறைகளும் என்னவென்று இனி தெரிந்து கொள்வோம்.

1. உள்ளாடும் அரங்கத்தின் தரைப் பகுதிகள் வழுக்காமல் இருப்பது போல எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.

2. இடம் குறுகியதாக இருப்பதால், விளையாட்டுக் கருவிகளை ஆங்காங்கே சுவற்றிலும் தரையிலும் பதித்து வைத்திருக்க வேண்டிய அமைப்பு இருக்கும். அதனால், ஏதாவது கம்புகளோ அல்லது சாதனங்களோ துருத்திக் கொண்டு வெளியே வைக்கப்பட்டிருந்தால் (அதாவது இரும்புக் குழாய், மின்கலக் கருவிகள் போன்றவை),