பக்கம்:நலமே நமது பலம்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - - 219

அவைகளை மூடி, மெத்தை போன்றவற்றால் கட்டி,

இடித்தாலும் மெத்தென்று இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

3. கண்ட கண்ட இடங்களில் விளையாட்டுக் கருவிகளைப் போட்டு வைக்காமல், தேவையான விளையாட்டுக் கருவிகளை வேண்டும்போது எடுத்துப் பயன்படுத்திவிட்டு, தேவை முடிந்ததும் பாயாக இருந்தால் உடனே சுருட்டிவைத்து, மற்ற ஏதாவது பொருளாக இருந்தால் அதற்கென்று உரிய இடங்களில் ஒதுக்கி வைத்து விடுவது நல்லது.

4. வருவோருக்கும் போவோருக்கும் போகவர வழி இருக்குமாறு அரங்க அமைப்பு, விளையாட்டு முறைகள் அமைக்கப் பட்டிருக்கவேண்டும்.

5. விளையாடும் பகுதிகளில் எல்லாம் நன்றாக வெளிச்சம் வரும்படி, சுற்றிலும் விளக்குகள் பொருத்தியிருக்க வேண்டும்.

6. குளியல் அறை, சாமான்கள் அறை, மண்டப அறைகள் எல்லாம் தூய்மையுடன் விளங்குமாறு கண்காணித்து வர வேண்டும்.

7. குழப்பம் நேராமல் ஒவ்வொரு விளையாட்டுக்கும், ஒவ்வொரு இடம் என்ற ஓர் உணர்வை ஊட்டுவது போல் தொடர்ந்து அவற்றைக் காக்கின்ற தன்மையும் கண்காணிப்பும் வேண்டும்.

8. இடம் அளவில் சிறுத்து, வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், எல்லோரையும் ஒரே சமயத்தில் விளையாட விடாமல், இரு குழுக்களாகப் பிரித்து,