பக்கம்:நலமே நமது பலம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒரு குழு ஆடும்போது மறு குழுவை வேடிக்கை பார்க்க வைத்து, பிறகு அவர்களுக்கும் அடுத்து வாய்ப்பு வருவது போன்று தந்தால், நெருக்கடியும் அதன் காரணமாக விளையும் இன்னலையும் தடுத்தாட் கொள்ளலாம்.

9. முறையான கண்காணிப்பு, முறையுட்ன் பயிற்சியாளர்களின் ஆழ்ந்த ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

10. உள்ளாடும் அரங்கத்தில் நடந்து கொள்ளும் முறையினை எல்லாம், விதிமுறைகளாகத் தொகுத்து அறிவிப்புப் பலகையில் குறித்து வைத்திருக்க வேண்டும்.

அதில் செய்யத் தகுந்தன, செய்யத் தகாதன என்பனவற்றையும் குறித்துக் காட்டலாம்.

11. அரங்கத்திற்குள் வரும் மாணவர்களுக்கு, விளையாடி வெற்றி பெறுவது ஒன்றுதான் நோக்கமல்ல என்பதையும், விளையாட்டு என்பது மகிழ்வு பெறத்தான், விளையாட்டு என்பது சிறந்த பண்பாட்டை வளர்க்கத்தான், விளையாட்டு மூலம் சிறந்த பாதுகாப்பு உணர்வைப் பெறத்தான் வருகிறோம் என்கிற நல் உணர்வை ஊட்டுவது மிக மிக அவசியமாகும்.