பக்கம்:நலமே நமது பலம்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில் தண்ணிரை நிரப்பிச் சில நாட்கள் கழிந்த பிறகு, அவற்றை வடித்து நீக்கி விட்டுப் புதிய தண்ணிரை இட்டு நிரப்புவது. இந்த இடைக்காலத்தில் “பாசகம் (Chlorine) என்னும் மருந்தினை இட்டுத் தூய்மைப் படுத்துவார்கள். இதனை நீர் நிரப்பி நீக்கும் நீச்சல் குளம் என்று கூறலாம்.

2. அடுத்தது நீச்சல் குளம் அமைந்திருக்கும் முறையில் ஒருபுறம் இருந்து தண்ணிர் வந்து குளத்தில் இருந்து அந்த நீரோட்டத்துடனேயே வெளியேறிப் போய் விடுகின்ற அமைப்பு. இதில் நீரோட்டம் இருந்து கொண்டே இருப்பதால் என்றும் தண்ணிர் தூய்மையாகவே இருக்கும்.

மூன்றாவது வகை நீச்சல் குளத்தில் தண்ணிர் அதேதான். தூய்மையாக வந்த தண்ணிர் பயன்படுத்தப்பட்ட பிறகு, குழாய் மூலம் வெளியே கொண்டுபோகப்பட்டு அங்கே தூய்மையுறச் செய்து, மீண்டும் அதே நீரை சுத்தமாகக் குளத்தில் விடுதல். இது நீர் சுற்றோட்ட முறை என்பதாகும்.

இவ்வாறு அமைக்கப்படுகின்ற நீச்சல் குளங்கள் வெளிப்புற நீச்சல் குளம், உள்ளக நீச்சல் குளம் (Outdoor and in door swimming pool) 6T60s QG36,168,5LLGub.

இத்தகைய் செயற்கை முறையில் அமைந்த நீச்சல் குளங்களில், ஒழுங்கு முறையுடன் நடந்து கொண்டால் தான் தண்ணிரும் தூய்மையாக விளங்கும். பலருக்கு பல்வேறு விதமான நோய்களும் வராமல் இருக்கும். அத்துடன் விபத்துக்கள் நிகழாமலும் காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே, நீச்சல் குளங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இனி காண்போம்.