பக்கம்:நலமே நமது பலம்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 225

மேலே கூறிய வகையினர் மட்டும் வரவேண்டாம் என்று கூறியவுடன், வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று காண்போம்.

1. நீச்சல் குளத்திற்கு வருபவர்கள் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வரக்கூடாது. தண்ணிர் கெட்டு விடும் என்பதால், சவுக்காரம் அல்லது சீயக்காய் போட்டு முதலில் குளித்த பிறகுதான் குளத்துள் இறங்க வேண்டும்.

2. தண்ணிரில் இருக்கின்ற பொழுது சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றுவது இயற்கைதான். அதனால் பலர் பயன்படுத்துகின்ற நீச்சல் குளம் பாழாகி விடும் என்பதால், நீச்சல் குளத்தில் நுழைந்து குளிக்கு முன், கழிவறைகளுக்குச் சென்று உபாதையை நீக்கி விட்டு வர வேண்டும்.

3. குளித்து விட்டு நீச்சல் குளம் நோக்கி வரும்போது, வருவதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தடை கரைசல் கலந்த நீரின் வழியேதான் நடந்து வர வேண்டும்.

4. தூய்மை தரும் துப்புரவு விதிகளை நீச்சல் குளத்திற்கு வெளியில் இருந்தே கடைப்பிடித்து வர வேண்டும். நீச்சல் குளத்துள் மட்டுமே ஒழுங்கு விதி இருக்க வேண்டும் என்பதில்லை. உள்ளும் புறமும் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டியது ஒழுங்கு முறைகள்தான்.

5. நீந்தும் ஆசையில் தனது உடைகளை உடைமைப் பொருட்களை, ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு வரக்கூடாது. அதற்கென்று உரியவரிடம் சென்று பொருட்களைப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டுத்தான் வரவேண்டும்.

இனி நீந்தும் போது மேற்கொள்ள வேண்டிய முறை களைக் கவனிப்போம். - -