பக்கம்:நலமே நமது பலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 21

ஆனால், கிருமிகளால் உண்டாகின்ற நோய்களைப் பரம்பரையாக வரும் வியாதிகளாக நினைத்துக் கொள்ளக்

கூடாது.

ஒரு சரித்திர சோதனை:

கிரிகர் மென்டல் எனும் ஆஸ்திரிய துறவி ஒருவர், பரம்பரை பற்றிய சோதனை ஒன்றை மேற்கொண்டு அறிவியல் பூர்வமான கருத்தொன்றை வெளியிட்டார்.

அவர் முதலில் எடுத்துக் கொண்ட சோதனைப் பொருள் தாவரமாகும். பட்டாணிப் பயிறுச் செடி (Pea) யில் உயரமாய் வளரும் ஒன்றையும் குட்டையாக வளரும் செடி ஒன்றையும் எடுத்து இரண்டையும் கொண்டு விதைகளைத் தயாரித்து நட்டு வைத்தார்.

இதில் வளர்ந்த செடிகள் நன்கு உயரமாக வளர்ந்தன.

இவற்றிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுத்து மீண்டும் நட்டு வைத்தபோது, சில செடிகள் உயரமாகவும், சில செடிகள் மித உயரமாகவும், சில செடிகள் குட்டையாகவும் வளர்ந்தன. இதுபோல் மூன்றுமுறை விதைகளைத் தேர்ந்தெடுத்து நட்டு சோதித்ததில் இப்படித்தான் செடிகள்

சில உயரமாகவும் சில குட்டையாகவும் வளர்ச்சி கொண்டன.

குட்டையான செடிகளின் விதைகளை நட்டதில் குட்டையான செடிகளே வளர்ந்தன. இவ்வாறு 5 முறை சோதித்ததில் உயரமாக செடிகள் பல வளர்ந்ததும். குட்டையாக வளர்ந்ததும் கண்டு பிடிக்கப்பட்டு, கடைசியாக கிரிகர் மென்டல் ஒரு முடிவுக்கு வந்தார்.

இப்படிப்பட்ட வளர்ச்சித் தோற்றமும் மாற்றமும் பிறப்புக்குப் பிறப்பு (Generation) தொடர்ந்து கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/23&oldid=691047" இலிருந்து மீள்விக்கப்பட்டது