பக்கம்:நலமே நமது பலம்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வேண்டும். முடிந்தவரை மெதுவாக மேலே உயர்த்திய பிறகு, முன்போல் கைகளைக் கொண்டு வந்து அழுத்தவும்.

இதிலே உள்ள இரண்டாவது முறை: மூழ்கியவரைக் குப்புறப் படுத்திட வைத்து, பாதி அளவு அவரது இடுப்புப் பகுதியோரம் முழங்காலிட்டு, அவரது தோள் பட்டைகள் மேல் கைகளை வைத்து, முதுகெலும்புக்கு 2 அங்குலம் பக்க வாட்டில் இருபுறமும் வைத்து, அழுத்துபவர் உடல் எடை முழுதும் பொருந்தும்படி முன்புறமாகத் தள்ளவும். பிறகு மெதுவாக அழுத்தாமல் விடவும்.

பிறகு இடுப்புக்குக் கீழே கைகள்ை விட்டு, இடுப்பு எலும்புகளை மெதுவாகப் பற்றி, உடலை 4லிருந்து 6 அல்லது 7 அங்குல உயரம் மேலே உயர்த்தவும். இந்த அசைவானது அவரது மார்புப் பகுதியை விரிக்கவும், புதுக்காற்று உள்ளே புகவும் உதவும்.

இதுபோன்ற முதலுதவி முறைகளைச் செய்வது மட்டும் போதும் என்ற நிறுத்தி விடாமல், மருத்துவருக்கும் சேதி அனுப்பி விடவும். அவர் வர முடிந்தால் நல்லதுதான். இல்லையேல் மூழ்கியவரைக் கொண்டு செல்ல முடிந்தால், இரண்டில் எது எளிதோ அதை விரைந்து செய்ய வேண்டும். பாதுகாப்பு முறையில் எதையும் காலத்திற்குள் செய்வது தான் முக்கியம். நேரம் போக்குவது என்பது பாதுகாப்பில் இருந்து வெகுதூரம் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே அர்த்தமாகும்.

ஆகவே, விரைந்து உதவி செய்வதைக் கொள்கை யாகவே கொள்ள வேண்டும். உதவுவோம், உதவி புரிவோம், உதவி பெறுவோம். உலக வாழ்க்கையின் உன்னதமான பயன்களை வழங்குவோம். -

நலமே நமது பலம் என்ற லட்சியத்தைத் தொடர்ந்து பின்பற்றி வெற்றிகரமான வாழ்வு நமதென்று முழங்குவோம்.