பக்கம்:நலமே நமது பலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வருகிறது என்றும், உயரமான செடிகளிலிருந்து உயரமான செடிகள் குட்டையான செடிகள் வளர்கின்றன என்றும் அவர்

உலகுக்கு அறிவித்தார்.

அடுத்து அவர் எலிகளை வைத்தும் சோதனை நடத்தினார். கறுப்பு நிற எலிகளையும் வெள்ளை நிற எலிகளையும் இனக்கலப்பில் ஈடுபடுத்தினார்.

அதில் முதலாவதாகத் தோன்றிய எலிகள் (First Generation) கறுப்பு நிறம் கொண்டவைகளாக இருந்தன.

அவைகளுக்குள்ளேயே இனக்கலப்பு நடத்தியபோது பிறந்த எலிகளில் சில வெள்ளை நிறமும் சில கறுப்பு நிறமும் கொண்டிருந்தன.

இதிலிருந்து நாம் ஒரு கருத்தைப் புரிந்து கொள்கிறோம்.

பிறப்பின் சிறப்பு:

இரண்டு விதமான தன்மையுள்ளவற்றை ஒன்று சேர்த்து புதிதாகப் பிறப்பிக்கிறபோது, ஒன்றின் தன்மையானது முதலில் மேலோங்கி நிற்கிறது.

அதாவது இரண்டு செடிகளைக் கலந்தபோது உயரமானது முதலில் வந்தது. இரண்டு நிற எலிகளைக் கலந்தபோது கறுப்பு நிற எலிகள் பிறந்தன. இதில் உள்ள சிறப்பம்சமானது, பெற்றோர் ஒருவரின் தனித்தன்மைதான் முதலில் மேலோங்கி வருகிறது.

பெற்றோர் ஒருவரின் ஜீன் முதலில் கிளர்ச்சி பெறுகிறது. மற்றவரின் ஜீன் மறைந்து கிடக்கிறது. அடுத்தடுத்து ஏற்படுகிற பிறப்பின்போது, எந்த ஜீன் எழுச்சி பெறுகிறதோ, அந்த ஜீனின் குணமே மேலோங்கி வெளிப்பட்டு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/24&oldid=691055" இலிருந்து மீள்விக்கப்பட்டது