பக்கம்:நலமே நமது பலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆதிநாட்களில் ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளுக்கிடையேயும், தந்தையர் மகள்களுக்கிடை யேயும், தாய்கள் மகன்களுக்கிடையேயும் திருமணங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கடைப்பிடித்த கொள்கையாக இருந்தது.

அவர்களின் ஆசைப்படியே ஆற்றல் மிக்க வாரிசுகள் பிறந்தன என்றாலும், அந்த அரசின் அழிவு அவர்கள் செய்த தவறுகளால் நேர்ந்ததே தவிர, செய்து கொண்ட திருமணங்களால் அல்ல.

தென்னிந்தியாவில் கூட, ஒரு குடும்பத் திருமணங்கள் அக்காள் மகள், அத்தை மகள், மாமன் மகள் என்பதாக பெண் கொடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் நடைபெற்று வருகின்றது. -

வளர்ச்சியுற்ற நாடுகளில் மிக நெருங்கிய உறவினர் களுக்கிடையே நடைபெறும் திருமணங்கள், தவிர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. நன்மைகளும் தீமைகளும்:

சொந்தத்திலேயே கல்யாணம் செய்து கொள்கிறபோது, சில நன்மைகள் கிடைப்பது உண்மைதான். நலமான, பலமான குழந்தைகள் பிறக்கும் என்பதும் நன்மைதான். என்றாலும் ஏற்படுகின்ற தீமைகள் அதிகம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சொந்தத்தில் ஏற்படுகிற திருமணத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் பற்பல நோய்கள் உண்டாகின்றன. அதுவும் பரம்பரை நோய்களாக வந்து விடுகின்றன என்றும், அதற்குச் சான்றுகளாக ஓரிரு நோய்களையும் கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/26&oldid=691057" இலிருந்து மீள்விக்கப்பட்டது