பக்கம்:நலமே நமது பலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவற்றிலிருந்து தப்பித்து வளர்ந்து, பிறந்த குழந்தையும் பெருவாரியான சூழ்நிலைத் தாக்குதல்களுக்கும் ஆளா கின்றது.

சுற்றுப் புறத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் காற்று, சூரிய வெளிச்சம், தண்ணிர் மற்றம் உயிர்வாழ் இனங்கள் எல்லாமே, பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் சவால்களாகவே அமைகின்றன.

இப்படிப்பட்ட சுற்றுப்புற சூழ்நிலைகளை மனிதர்கள் தங்கள் மேம்பட்ட அறிவையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டே வெற்றி கண்டு மேன்மை அடைய முடியும்.

பாரம்பரிய சக்தியுடன் பிறக்கின்ற குழந்தை, சுற்றுப்புற

சூழ்நிலையை வெற்றி காணுகிறபோது நெடுநாள் வாழ்கிற வாய்ப்பினைப் பெறுகிறது.

சுற்றுப்புற சூழ்நிலையானது பல தூய்மை இழப்புகளால் பாதிக்கப்படுகிறபோது, வாழ்கிற நாளும் பல நோய்களினால் அழிந்து போக நேரிடுகிறது.

பொருளாதார வளர்ச்சியிலும் உடல் காக்கும் முயற்சியிலும் முன்னேறிய நாடுகள் பல. ஸ்வீடன், நார்வே, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சராசரி மனிதர் வாழும் வயது 65 முதல் 75 வயது வரை தொடர்கிறது.

இந்தியாவின் சராசரி மனிதர் வயது 55 என்கிறார்கள்.

நமது நாட்டின் சுற்றுப்புறச் சூழல்களை இன்னும் நாம்

தூய்மைப்படுத்திக் கொள்வோமானால், இன்னும் வாழ்நாள் வயது கூடியே செல்லும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/28&oldid=691059" இலிருந்து மீள்விக்கப்பட்டது