பக்கம்:நலமே நமது பலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. நோய்களின் வாயும் வழியும்

நோய் என்றால் துன்பம் என்பது பொருள். வாய் என்றால் வழி என்று அர்த்தம்.

துன்பம் தோன்றுவதற்கு வழி என்ன? வாய்ப்பு என்ன? விரட்டும் முறைகள் என்ன? வேண்டிய துறைகள் என்ன

என்பது பற்றி இந்தப் பகுதியில் சற்று விரிவாகக் காண்போம்.

ஆங்கிலத்தில் நோய் என்று பொருள்படக் கூறிய வார்த்தை Disease என்பதாகும். அந்த வார்த்தையை இரண்டாகப் பிரிக்கிற போது Dis+Ease என்று வருகிறது.

Ease என்ற சொல்லுக்கு சீரான, சகஜமான ஒரு சுகமான நிலை என நாம் கூறலாம். Dis என்றால் அதைப் பாதிக்கும் நிலை எனலாம். ஆகவே சுகமான ஒரு சகஜ நிலையின் பாதிப்பையே நோய் என நாம் கூறலாம்.

அந்த அர்த்தத்தை நாம் இப்படியும் விளக்கிக் கூறலாம்.

உடலின் உறுப்புக்களும் உள்ஸ்ரீப்புக்களும் ஏதோ ஒரு

முறையில் பாதிக்கப்பட்டு செயல்படக் கூடிய சீரினை இழக்கும் நிலையை, நாம் நோய் எனலாம். -

ஆதிகால மனிதர்கள் தங்களுக்கு வந்த நோய்களுக் கெல்லாம் காரணம், துஷ்டதேவதைகள் உடலுக்குள் புகுந்து கொள்வதனால் என்றே நம்பினர்.

ஆகவே, அவர்கள் பூசாரிகளை அழைத்து, அவர்கள் கூறுகிற வழிகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றினர். அவர்கள் செய்கிற கொடுமையான காரியங்களையும் கண்டு கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பொறுத்துக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/30&oldid=693176" இலிருந்து மீள்விக்கப்பட்டது