பக்கம்:நலமே நமது பலம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 31

நோய் வந்த பிறகு அவற்றை அழிக்க வேண்டு மென்றால், அதற்காகப் பின்வரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

1. நோய் தொடக்கம் கொள்ளும் முறைகளை அறிதல்.

2. நோய் பரப்பும் சாதனங்களைக் கண்டு அறிதல்

3. நோய் தடுப்பு முறைகளைக் கையாளுதல்.

நோய்களும் அவற்றின் வகைகளும்:

நோய்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தொற்று நோய், இரண்டாவது பெருவாரி நோய் (infections).

தொற்று நோய் என்பது ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு ஒட்டிக் கொள்வதாகும் அல்லது தொத்திக் கொள்வதாகும்.

தொற்று நோய்களைத் தோற்றுவிக்கக்கூடிய விஷக் கிருமிகள் (Germs) மிகுந்த வலிமையுடையனவாகும். இந்தக் கிருமிகள் உறுதியாகப் பற்றிக் கொள்ளக்கூடிய, எதிலும் எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டனவாகும். -

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த வகை நோய் வந்து விட்டால், மற்றவர்களுக்கு அவர்கள் அறிந்திருக்கும்போது நோய் பற்றிக் கொள்ளும். இதை அவர்கள் தடுக்க முயற்சித்தாலும் தடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.

தொற்று நோயானது உணவு, தண்ணிர், காற்று, சூழ்நிலை இவற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகிப் பரவிக்கொள்ளும் பாங்குடையதாகும்.