பக்கம்:நலமே நமது பலம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 . டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. சில பெருவாரி நோய்கள் /.. aGauss'wa (Malaria): - -

பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் நுண் கிருமியால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பிளாஸ்மோடியம் நோய்க்கிருமி, புரோட்டோசா கிருமி

வகையைச் சார்ந்ததாகும். -

மலேரியா காய்ச்சலானது குளிரும் நடுக்கமும் ஏற்படுத்துகிற குணமுடையதாகும். இந்தக் காய்ச்சலின் வெப்பம்103 டிகிரி வரை ஏறிச்செல்லும். குறைந்தது.10 முதல் 20 மணி நேரம் இதன் தாக்குதல் தொடர்ந்து, பிறகு தணியத் தொடங்கும்.

இந்தக் காய்ச்சல் ஒரு குறிப்பிட்ட 6LG6,1606 T (Interval) எனக் குறிப்பிட்ட நேரத்தில் வரும்; வந்து போகும்.

காய்ச்சல் ஏற்படும் விதம்:

அனோபிலிஸ் (Anoples) என்ற பெண் கொசு கடிப்பதால்தான் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்தப் பெண் கொசு, மலேரியா காய்ச்சல்காரரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகிறபோது மலேரியா நோய்க் கிருமிகளும் இரத்தத்துடன் இதன் வாய்க்குள் வந்து விடுகின்றன.

வயிற்றுக்குள் போன கிருமிகள் மேலும் பல்கிப் பெருகி வளர்ந்து, கிருமிகளின் வாய் எச்சிலுக்குள் வந்து வெளியேறக் காத்துக் கொண்டிருக்கின்றன.