பக்கம்:நலமே நமது பலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 35

பெண் கொசுவானது இன்னொரு மனிதனைக் கடிக்கும் பொழுது, வாய் எச்சியிலிருந்து விஷக்கிருமிகள் உடலுக்குள் புகுந்து காய்ச்சலை விளைவிக்கிறது.

கிருமியின் வரலாறு:

மலேரியாவை உண்டு பண்ணுகிற கிருமிகள், தங்களது முட்டைகளை, தேங்கிய குட்டையிலும் சாக்கடையிலும் இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து பிறக்கின்றவை களுக்கு லார்வா (Larvae) என்று பெயர்.

லார்வா பெரிதாகிறபோது அதற்கு பியூப்பா (Pupae) என்று பெயர். பியூப்பாவிலிருந்து தான் பெரிய கிருமிகள் வருகின்றன. அவையே அகோரமான ஆற்றல் பெற்ற விஷக் கிருமிகளாக மாறிக் கெடுதல் செய்கின்றன.

மலேரியாவின்அறிகுறிகள்

அதிகக் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், குளிர் நடுக்கம், அதிக பலஹlனம், வியர்வைப் பெருக்கு, விஷத்தன்மை ஏறிய உறுப்புக்கள் (Toxin) ஆகியவையாகும்.

தடுக்கும் முறைகளும் தற்காப்பு வழிகளும்:

1. குளம், குட்டை, சாக்கடைகளில் கொசுக்கள் உண்டாகாதவாறு அழித்தொழிக்கும் மருந்துகள் தெளிக்க வேண்டும்.

2. D.D.T. மருந்தைத் தெளிக்க வேண்டும். வளர்ந்த கொசுக்களை அழிக்கும் வல்லமை இந்த மருந்துக்கு மிகுதியாக உண்டு.

3. @gmulsificir (Quinin) என்ற மருந்தும், இதனைச்சார்ந்த மருந்து வகைகளும் இந்த நோய்க்கு நல்ல மருந்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/37&oldid=693188" இலிருந்து மீள்விக்கப்பட்டது