பக்கம்:நலமே நமது பலம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. நோயாளிகள் நல்ல ஓய்வு எடுக்க

வேண்டும்.

5. நோயாளி படுத்திருக்கும் இடம் சுத்தமாகவும், நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

6. கொசுவலை கொசுக்கடியைத் தடுக்கும். கிரீம், புகை மூட்டம் போன்றவை கொசுத் தொல்லையைப் போக்க உதவும்.

2. &Game; Gondo (Plague):

இதைக் கொள்ளை நோய் என்றும் கூறுவார்கள். கொள்ளை கொள்ளையாய் மக்களைக் கொள்ளை கொண்டு போகிற கொடிய நோய் இது. இதை உண்டாக்குகிற பாக்டீரியாவின் பெயர் பேசில்லஸ் பெஸ்டிஸ் (Bascillus Pestis).

எலிகள் தான் இந்த நோயைப் பிறப்பிப்பதிலும் பரப்புவதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒருவகையான பூச்சியின் (Flea) வாயில் உள்ள பாக்டீரியாக்கள் எலியின் உள்ளே இருப்பவையாகும். இந்தப் பூச்சியின் பெயர் செனாப் சீல்லா சியோபிஸ் (Xenopsylla Cheopis). இந்தப் பூச்சி, நாய்களை மற்றும் பல மிருகங் களைக் கடிக்கிறபோது அவைகள் பிளேக் எனும் நோயால் அவதிப்படுகின்றன.

இந்த வியாதியால் கஷடப்பட்டு இறந்த நாய்களி லிருந்தும், மிருகங்கள் எலிகளிலிருந்தும் கிருமிப் பூச்சிகள் (Fleas) வெளிக்கிளம்பி மனிதர்களைக் கடிப்பதன் மூலம் உடம்பில் புகுந்து விடுகின்றன.