பக்கம்:நலமே நமது பலம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 37

இரண்டு வகை நோய்:

பிளேக்கில் இரண்டு வகையான நோய்கள் உண்டு. 1. Slugumsofl; 15Gem (Bubonic Plague).

2. Gum Guomsofl; 15Gst (Pneumonic Plague).

பியூபானிக் பிளேக் நோய் ஏற்படுகிறபோதும் உடலில் உள்ள சுரப்பிகள் வீங்கி விடுகின்றன. அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

நியோமோனிக் பிளேக் நோய் ஏற்படுகிறபோது நுரையீரல்கள் விறைப்படைந்து விடுகின்றன.

இவ்விரண்டு வகை நோய்களுமே மனிதர்கள் ஒருவரிட மிருந்து ஒருவருக்குப் பரவி உயிர்களைக் கொள்ளை கொண்டு விடுகின்றன.

பிளேக் நோயின் அறிகுறிகள்:

நோயாளிகள் காய்ச்சல் கண்டு அவதிப்படுகிறார்கள். தொடைப் பகுதிகளில் சுரப்பிகள் வீக்கமடைந்து காணப்படும். நோயாளிகள் இனம் புரியாத அதிர்ச்சியடைந்து மிகவும் துன்பப்படுவார்கள்.

தடுக்கும் முறைகளும் தற்காப்பு வழிகளும்:

நோய் ஆரம்பமாகிவிட்டால் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிவிடும் தன்மையுள்ளதால், மிகவும் விரைவாக இதற்கு நிவாரணம் தேடி, நிலைமையை சமாளித்துத் தடுத்து அழித்திட வேண்டும்.

1. வீடுகளிலிருந்து எலிகளை விரட்டியோ கொன்றோ அப்புறப்படுத்த வேண்டும். எரித்துவிடுவதும் நல்லது.