பக்கம்:நலமே நமது பலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 39

ஆற்றலை உடையதாகும். காலரா நோயைப் பரப்புகின்ற கிருமிக்கு காலரா வைபிரியோ (Cholera Viberio) என்பது பெயராகும்.

மனிதர்கள் அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலமும் அசுத்தமான உணவுப் பண்டங்களை உண்பதன் மூலமாகவும் காலரா நோய், கன வேகத்தில் தொற்றிக் கொண்டு பரவி விடுகிறது.

காலரா கண்டவர்கள் எடுக்கிற வாந்தி மேலும், கழிவான பேதி மேலும் உட்காருகிற கொசுக்கள், ஈக்கள் பறந்து போய், சாப்பிடுகிற உணவுப் பொருட்கள் மீது உட்காருகின்றன. தண்ணிரில் சென்றும் அசுத்தப்படுத்தி விடுகின்றன. அவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் காலராவுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

நோயின் அறிகுறிகள்: -

1. கடுமையான வாந்தியும் கழிச்சலும் ஏற்படும். 2. தடுக்க முடியாதபடி பேதி அதிகமாகிக் கொண்டே

போகும். 3. வரவர சிறுநீர் கூட வெளியேற்ற முடியாத அவதிநிலை

ஏற்படும். 4. உடலில் இரத்தக் குறைவு ஏற்படும். நாடித்துடிப்பு

குறைந்து கொண்டே வரும்.

5. தண்ணிரின் அளவு குறைந்து கொண்டே வர வர, உடல் முழுவதும் வலியும் வேதனையும் மிகுதியாகிக் கொண்டே வரும்.

6. இதயமும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். இத்தனை விஷயங்களும் சில மணி நேரங்களில் நடந்து நோயாளியைச் சாகடித்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/41&oldid=693197" இலிருந்து மீள்விக்கப்பட்டது