பக்கம்:நலமே நமது பலம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தடுக்கும் முறைகளும் தற்காப்புவழிகளும்:

1. கிணறு, குளங்கள், தண்ணிர்த் தேக்கங்கள் முதலியவை

தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பொட்டாசியம்

பர்மாங்கனெட் மருந்தைத் தண்ணிரில் தெளித்துத்

தூய்மைப்படுத்தலாம். 2. தண்ணீரைக் குடிப்பதற்கு முன் காய்ச்சிப் பயன்படுத்த

வேண்டும்.

3. காய்கறி, உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன்

பொட்டாசியம் பர்மாங்கனெட் கலந்த தண்ணிரில் நன்றாகக் கழுவி சமைக்க வேண்டும்.

4. சமைத்த உணவை ஈ, கொசுக்கள் உட்காராமல் நன்கு

மூடிப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

5. காலரா கண்ட நோயாளியைத் தனி இடத்தில் வைத்திட வேண்டும். உறவுப் பெயரைச் சொல்லி ஒட்டிக் கொண்டு இருக்காமல், ஒதுங்கி இருப்பது நல்லது.

6. வாந்தியும் பேதியும் குழி தோண்டிப் புதைக்கப்பட

வேண்டும். -

7. காலரா கண்ட ஊர் மக்கள் எல்லோரும் தடுப்பு ஊசி

போட்டுக் கொள்ள வேண்டும்.

8. காலரா வேகமாகப் பரவும் என்பதால், பள்ளிகள் நிறுவனங்கள் தொழிலகங்கள் முதலியவற்றைத் தற்காலிகமாகச் செயல்படாமல் மூடி வைக்கலாம்.

9. ஈக்களையும் கொசுக்களையும் அழிக்க D.D.T. யைப்

பயன்படுத்தலாம். **