பக்கம்:நலமே நமது பலம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 41

4. விஷக் காய்ச்சல் (Typhoid):

நச்சுக் காய்ச்சல் எனப்படுகின்ற விஷக் காய்ச்சல் டைபாய்ட் பேசில்லஸ் (Typhoid Bacillus) எனப்படும் நுண்கிருமியால் உண்டாக்கப்படுகிறது. -

தண்ணிர் உணவுப் பண்டங்கள் மூலமாக விஷக் காய்ச்சல் பரவுகின்றது. ஈக்கள் இந்நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கேற்கின்றன.

நோயின் அறிகுறியும் தாக்குதலும்:

1. ஈக்கள் கடியால் உடலுக்கு உள்ளே நுழைகின்ற கிருமிகள் சிறு குடலுக்குள்ளே சென்று குடல்

புண்ணை (Ulcer) உண்டாக்குகின்றன.

2. அதன் காரணமாகக் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. அந்தக் காய்ச்சல் - 4 வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்கும்.

3. சாதாரணமாக, காய்ச்சல் 103, 104 டிகிரி வரை இருக்கும். சில சமயங்களில் 108 டிகிரி வரை ஏறிவிடும்.

4. முதலில் தலைவலியில் தொடங்கி உடல் முழுவதும் அசாதாரண வலியை உண்டாக்கி, காய்ச்சலை ஏற்படுத்தும். முதல் மூன்று வாரங்களும் காய்ச்சல் கடுமையுடன் காய்ந்து, நான்காவது வாரத்தில் இறங்கத் தொடங்கும். -

5. 107 அல்லது 108 டிகிரி வரை காய்ச்சல் அடிக்கும்போது

அந்த நிலைக்கு ஹைப்பர் - பிரக்சியா (Hyper-Prexia)

என்று பெயர். இது ஆளைக் கொள்ளும் அபாய நிலையாகும்.