பக்கம்:நலமே நமது பலம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

காய்ச்சல் கண்ட 3 வாரங்களில் சிறு குடலில் கடுமையான புண்கள் ஏற்படும். குடல் பகுதியில் துளை போட்டு விடும். அதனால் குடலில் இரத்தக் கசிவும் ஏற்படும். இந்த நிலையும் அபாய நிலைதான்.

குடற் புண்ணானது குடல் பகுதியை அரித்து எடுத்து விடுவதால், இதனால் ஏற்படும் சிக்கல்கள் உயிருக்கே உலை வைத்து விடுகின்றன.

தற்காப்பும் தடுப்பு முறையும்:

1.

விஷக் காய்ச்சல் விடுபட்டுப் போனபிறகும், உடம்பினுள் அந்த நச்சுக் கிருமிகள் நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு, நிலைத்து நிற்கும். -

காய்ச்சல் போய் பல மாதங்கள் ஆன பிறகும் கூட,

நோயாளியாக இருந்தவர்கள் கழிக்கிற லத்திலும்

சிறுநீரிலும் கூட, இந்த விஷக்கிருமிகள் வெளியாகி, தொற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. ஆகவே நோயாளியாயிருந்தவர்களிடத்தில் மிக எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை நோய் தூக்கிகள் (Carriers) என்று அழைப்பார்கள். இவர் களிடத்தில் எச்சரிக்கை தேவை. o,

காலராபோன்றே இதற்கும் தனிப்பட்ட கவனம் தேவை. இதற்குரிய தடுப்பு முறைகளை போன்றே விஷக் காய்ச்சலுக்கும் வேண்டும். -

T.A.E. அம்மைப்பால் (vaccine) ஊசி போட்டுக்

கொள்வதன் மூலம் ஓராண்டு காலம் தடுப்பையும் தற்காப்பையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.