பக்கம்:நலமே நமது பலம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - - 43

. குளோரோ மைசிடின் பரோக்கின் செல் ட்ரான் பேக்ட்ரிம் போன்ற மருந்துகள் விஷக்காய்ச்சலை விரட்டியடிக்க உதவும் மருந்துகளாகும். என்றாலும் மருத்துவர்கள் ஆலோசனையுடன் தான் மருந்து களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. வயிற்றுக் கடுப்பு (Dysentery):

வயிற்றுக் கடுப்பு அல்லது வயிற்று அளைச்சல் என்று அழைக்கப்படுகிற இந்த நோய், நோயாளி கழிக்கிற மலத்தில் இரத்தம் கலந்து இருப்பதாகும்.

நேரடியாக மலத்தில் இரத்தம் கலக்காது. முதலில் கசிவு வெளிப்படும். அந்த இரத்தம் கொஞ்சம் கருமை கலந்ததாக அல்லது தவிட்டு நிறம் கொண்டதாக (Brownish) இருக்கும்.

இரண்டு வகையான வயிற்றுக் கடுப்பு நோய் உண்டு.

1. NGlorist t ssir Lfl (Amoebic Dysentery) @i புரோட்டாசான் பேராசைட் என்ற கிருமியால் உண்டாக்கப்படுகிறது.

2. Gulebeofi tq.g6r fi (Bacillary Dysentery) @gi G

வகை பாக்டீரியா கிருமியால் உண்டாக்கப்படுகிறது.

தூய்மையற்ற பகுதியில் வாழ்கிற மக்களுக்கு, தொற்று நோய் போல, பெருவாரியாக பேசல்லரி வயிற்றுக்கடுப்பு நோய் பரவி, பல ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்குகிற கொள்ளை நோயாகவும் உருவெடுத்து விடுகிறது.

அமோபிக் டிசன்டரி எனும் நோயின் கிருமிகள், குடற்பகுதியிலும் ஈரல் பகுதியிலும் புகுந்து, பை போன்ற ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டு, எந்த மருந்துக்கும் அழியாதபடி ஆணித்தரமாக இருந்து விடுகின்றன.