பக்கம்:நலமே நமது பலம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அறிகுறிகள்: 1. காலரா, விஷக் காய்ச்சல் தோன்றி பரவுவது போலவே வயிற்றுக் கடுப்பு நோயும் பரவுகிறது. ஈக்களே இந்த நோய் பரவக் காரணமாக இருக்கின்றன. தண்ணிரும் உணவு வகைகளுமே நோய் பரவும் நிலைக்கு ஆதாரங்களாகின்றன.

2. ஆரம்பத்தில் வயிற்றுப் போக்கு ஏற்படும். பிறகு கடுமையான வயிற்று வலியையும் உண்டாக்கி விடுகிறது.

தடுப்பு முறைகள்:

1. சுத்தமான குடியிருப்புப் பகுதியும், சுகாதாரமான

வாழ்க்கை முறைகளும், முக்கிய தேவைகளாகும்.

2. ஈக்கள் பெருகாமல் கட்டுப்படுத்த வேண்டும்.

3. உணவுப் பண்டங்களை மூடி பாதுகாத்து வைக்க

வேண்டும்.

4. நோய் ஏற்பட்டதும் உரிய அதிகாரிகளுக்குத் தகவல்

தந்திடும் முறை, மிகவும் பயனளிக்கும் முறையாகும்.

5. இதற்கான மருந்துகள் சில, எமடின், குளோரோகுயின் மாத்திரைகள், அயாடா குளோர் ஹைடிரோக்சி

குயினோலின் மாத்திரைகள், சல்பா குவானிடைன் மாத்திரைகள்.

6. sydgoao Ggaa (Small Pox):

இதைப் பெரியம்மை என்றும் வைசூரி என்றும் கூறுவார்கள். மிகவும் பயங்கரமான நோய் இது. பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்க பெருவாரியான நோய் இது. இது வைரஸ் என்கிற நோய்க்