பக்கம்:நலமே நமது பலம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. நோயுற்றவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

2. அவரது படுக்கை, உடை மற்றும் துணிமணிகள் தூய்மைப்படுத்தப்படவேண்டும். இருக்கும் அறையும் சுத்தமாக இருக்க வேண்டும்.

3. உப்பில்லாத உணவு தருவது மிக மிக அவசியம்.

4. எந்தவிதமான மருந்தும் தரக்கூடாது. நோயாளிக்கு

ஆறுதலான உதவிகள் செய்து வந்தால் போதுமானது. 5. அம்மை நோய் தடுப்புக்காக முன்கூட்டியே, அம்மை

(vaccination) குத்திக் கொள்ள வேண்டும். அம்மை குத்திக் கொள்ளும் முறையைக் கண்டு பிடித்துத் தொடங்கி வைத்தவர் எட்வர்டு ஜென்னர் எனும் ஆங்கிலேய விஞ்ஞானியாவார். இந்த முறை 18ம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

குழந்தைகளுக்கு அம்மை குத்தும் பழக்கம் உண்டு. அந்த மருந்து ஏழு ஆண்டுகள் வரை இருந்து காக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அம்மை குத்திக் கொண்டால் தடுத்து தற்காத்துக் கொண்டு நிம்மதியுடன் வாழலாம். -

7. dogowc6umfosydgoco Ggaa (Chicken Pox):

வைரஸ் கிருமிகளால் இந்நோய் உண்டாகிறது. பொதுவாகக் குழந்தைகளையே இந்த நோய் பெரிதும் பிடித்துக் கொள்கிறது. பெரியம்மை நோய் பரவுவது போலவே இதுவும் பரவுகிறது.

அறிகுறியும் அடையாளமும்

1. குழந்தைக்கு முதலில் காய்ச்சல் அடிக்கும். 2. குழந்தையின் முகம் சிவந்து காணப்படும்.