பக்கம்:நலமே நமது பலம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பள்ளிக் குழந்தைகளுக்கு வருகின்ற பொதுவான நோய்களில் இதுவும் ஒன்று.

அறிகுறிகள்:

1. ஜலதோஷம் இருமலுடன் கூடிய காய்ச்சல் முதலில்

வரும். கண்கள் சிவப்புக் கோளமாக மாறும்.

2. காய்ச்சல் அடித்த நான்காம் நாளில் உடம்பில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். ஏதோ பூச்சிக் கடியால் ஏற்படுவது போன்ற தடிப்பு போல் அது அமைந் திருக்கும்.

3. ஆரம்பத்தில் நெற்றி, முடியிருக்கும் கீழ்ப்பகுதிகளில்

தடிப்பு ஏற்பட்டு, பிறகு உடல் முழுவதும் ஏற்படும்.

4. அந்தத் தடிப்பில் சீழ் (Pus) இருக்காது.

5. காய்ச்சலின் கடுமை 102 முதல் 103 டிகிரி வரை

உயரும்.

தடுப்பு முறை:

1. ஊசி மருந்து மூலம் குணப்படுத்தலாம் (Innoculations).

2. குழந்தையை மற்றவர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்

படுத்தி வைக்க வேண்டும்.

3. குழந்தை இருக்கும் அறையில் காற்றோட்ட வசதி

வேண்டும்.

4. குழந்தைக்குச் சரியான மருத்துவம் மற்றும் கவனிப்பு இல்லாவிடில், கண், காது, போன்ற பகுதிகள் பாதிக்கப் படலாம். நிமோனியா, சிறுநீர்ப்பை மற்றும் இதயம் கூட பாதிக்கப்படலாம்.