பக்கம்:நலமே நமது பலம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 49

9. 33.66wagi &6060 (Whooping Cough):

பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் இந்த நோய் பிடிக்கிறது. வைரஸ் கிருமிகளால் உண்டாக்கப் படும் இந்த நோய் எப்பொழுதாவது பெரியவர்களைத் தாக்குகிறது. -

தொடர்ந்து துன்புறுத்துகிற வியாதி என்றும் இதைக் கூறலாம்.

இரண்டு வாரங்கள் வரை தொடர்கின்ற கக்குவான் இருமல், சரியாகக் கவனிக்கப்படாவிட்டால் பல மாதங்கள் வரை நீடிக்கும்.

தொடர்ந்து இருமலும் சளியின் தொல்லையும் தருகிற கக்குவான், ஒருவருக்குப் பலமுறை வந்து போனதென்றால் அவர் மிகுந்த பலஹlனமடைந்து விடுவார்.

இறுதியில் அவருக்கு நிமோனியா அல்லது வயிற்றுப் போக்கு நோய் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, இறந்து போகவும் நேரிடலாம்.

மூச்சுக் காற்று, கோழை (உமிழ்நீர்) மூலம் இந்நோய் பரவிக் கொள்கிறது.

நோயின் அறிகுறிகள்:

1. தும்மல், இருமல், ஜலதோஷம், தலைவலி போன்றவை

இந் நோய் ஆரம்பத்திற்குரிய அறிகுறியாகும்.

2. பிறகு இருமலும், இதயம் படபடக்க மூச்சு வேகப்

படுதலும் ஏற்படுகின்றன.

3. முகம் சிவந்து போகிறது. 4. நுரையீரல்களும் பாதிக்கப்படுகின்றன.