பக்கம்:நலமே நமது பலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 51

சில சமயங்களில் ஒரு ஊரையோ அல்லது ஒரு நகரையோ முழுமையாகப் பற்றிக் கொள்ளக் கூடிய வேகம்

இதற்கு உண்டு.

அறிகுறிகள்:

1. கடுமையான காய்ச்சல் சில சமயங்களில் 107 டிகிரி

வரை உயர்ந்து விடும்.

2. ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பெங்கும் வலியுடன் இது தொடங்கும். வேகமாகத் தொடரும்.

3. கடுமையான ஜலதோஷத்துடன் குளிரும் நடுக்கமும் வரும். தும்மலும் இருமலும் சற்று அதிகமாகவே இருக்கும்.

4. தொண்டை உலர்ந்து புண்ணாகி விடும்.

5. உடல் முழுவதும் அசதியும் பலஹlனமும் தெரியும்.

தடுப்பு முறைகள்:

1. நோயாளியைத் தனிமைப்படத்தி வைக்க வேண்டும்.

2. தடுப்பு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

3. ஜலதோஷம் உண்டாக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை

களைத் தவிர்த்திட வேண்டும்.

4. நோயாளிக்கு நல்ல ஓய்வு தேவை.

5. இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

என்றாலும் நவீன மருந்து முறைகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/53&oldid=693222" இலிருந்து மீள்விக்கப்பட்டது