பக்கம்:நலமே நமது பலம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. இந்த நோயில் கடுமையான தாக்குதலால், நோயாளிகள் பலர் பக்கவாத நோயினால் (Paralysis) பாதிக்கப் படுவதும் உண்டு.

தற்காப்பும் தடுப்புமுறைகளும்:

1. இந்நோய் வந்திருப்பது போல சந்தேகம் ஏற்பட்டாலும், உடனே போய் மருத்துவ சோதனை செய்து கொள்வது நல்லது?

2. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி,

தனிமைப்படுத்தி விட வேண்டும்.

3. மருத்துவரிடம் காட்டி முறையான மருந்துகளை

அளிக்க வேண்டும்.

4. இந்நோய் கண்டவுடன் காலதாமதம் செய்யாமல்

குணப்படுத்துகிற முயறசிகளில் ஈடுபடுவது நல்லது.

/3.2-c_g/633 Gda (Tuberculosis):

உலகம் முழுவதிலும் இந்நோய் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு மாபெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் நகர வாழ் மக்களையே நாடித் தாக்குகிற இந்த நோய், நாகரிக வாழ்வுதந்த ஒரு சோகம் என்று

கூட நாம் கூறலாம்.

டியூபர்கிள் பேசில்லஸ் என்ற கிருமிகள் இரண்டு வகையான உடலுருக்கி நோய்களை உண்டாக்கி

விடுகின்றன.

இந்தக் கிருமிகளால், மிருகங்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. அவைகளில் இருந்து மனிதர்களிடம் இந்த நோய் ஒட்டிக் கொள்கிறது என்பது ஒரு வகை.