பக்கம்:நலமே நமது பலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆரம்பத்தில் உள்ளே நுழைந்த உருக்கிக் கிருமிகள், நுரையீரலின் ஒரு பகுதியில் கூடுகட்டிக் கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்தக் கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலின் மற்ற பகுதிகளுக்கும் உறுதியாகப் பற்றிக் கொண்டு பரவி அந்த மனிதனைப் பாழடித்து விடுகின்றன.

நுரையீரலுக்குள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் கிருமிகள் சில சமயங்களில், இரத்தக் குழாய்களை அறுத்து வெட்டி விடுகிறபோது இரத்தக் கசிவு ஏற்படுகிறது.

அதனால் இரத்த இழப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து

நேரிடுகிறது. இதற்கு ஹேமோப்டிசிஸ் (Hemoptysis) என்று பெயர்.

சில சமயங்களில் இருமுகிறபோதும் இரத்த வாந்தி ஏற்படுவது உண்டு.

அறிகுறிகளும் அடையளமும்:

1. உடலில் பலஹlனம்

உடலில் எடைகுறைதல்

களைப்பு ஏற்படுதல்

மாலை நேரத்தில் காய்ச்சல் வருதல்

இரவில் வியர்த்தல்

இருமல் வந்து ஒரு மாதம் வரை தொடர்தல்

குழந்தைகளுக்கும் அடிக்கடி இருமல் வந்து தாக்கி காய்ச்சலையும் ஏற்படுத்துகிறபோது ஆரம்பநிலை உருக்கிநோய் என்று தெரிந்து கொள்ளலாம். அதை Primar Complex 6TeuTLumirseiT.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/58&oldid=693232" இலிருந்து மீள்விக்கப்பட்டது