பக்கம்:நலமே நமது பலம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொத்து சுகம் என்பார்கள். அந்தச் சொத்து என்பது நமது உடலில் நிறைந்திருக்கும் சத்துதான்.

சத்து சுகம் என்பதைத்தான், புரியாத மக்கள் எல்லாம் சொத்து சுகம் என்று பேசி, சொத்துக்காக அலைந்து சத்துக்களை போக்கி, செத்துத் தொலைக்கின்றார்கள். a

செத்துப் போவது என்பதும் சத்துப் போவதால் தான்.

இப்படிப்பட்ட சத்தும் சொத்தும் தான் நமது நலமாக பரிணமித்திருக்கிறது. பரிபாலித்துக் கொண்டிருக்கிறது.

நமது நலம்தான் உடல் பலமாக்தொடங்கி மனோபலமாக மாறி, ஆன்மபலமாக விருத்தியடைந்து ஆனந்த வாழ்வை அளிக்கிறது.

அப்படிப்பட்ட ஆனந்த நிலையை, எப்படியெல்லாம் நலம் பெருக்கி வாழ வேண்டும் என்றுதான், இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

அழகாக அச்சிட்டுத் தந்திருக்கின்றார் கிரேஸ் அச்சகத்தார். ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திருக்கின்றார்கள் திரு. அரிமா. ஆதாம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றியுடன் பாராட்டுக்கள்.

உடற்கல்வித்துறைக்காக நான் லட்சிய முனைப்புடன் எழுதி வரும் இலக்கிய நூல்கள் அனைத்தையும் வாங்கி ஆதரித்து உதவுகின்ற அருளாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லில்லி பவனம் அன்புடன், சென்னை - 17. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆசிரியர் முதல் பதிப்பில் எழுதிய முன்னுரையை அப்படியே பிரசுரித்துள்ளோம்.