பக்கம்:நலமே நமது பலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆரம்பத்தில் ஆயுர்வேத மருந்துகள் ஆறுதலாகக் குணமாக்கி உதவின. இன்று அறுவை சிகிச்சை மூலம் சிறப்புற குணமாக்கும் செய்ல்கள் வெற்றிகரமாக நடைபெறு கின்றன.

/5. grgad (Conjuctivitis):

கண் வீக்கமும் உறுத்தலும் தருகிற கண் நோய் இது.

இதைக் கண் இன்புளுவன்சா என்றும் கூறுவார்கள். மிகவும் மோசமான தொற்றுநோய்.

அறிகுறிகள்:

1. கண்களிலிருந்து நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

பீளை கண்ணோரத்தில் பிதுங்கிக் கொண்டு வரும்.

2. கண்களில் அரிப்பு இருக்கும்.

3. கண்கள் வீங்கி சிவப்பாகத் தெரியும்.

தற்காப்புத் தடுப்பு முறைகள்:

1. கண் நோய் உள்ளவர்களை நேருக்கு நேர் பார்க்கக்

கூடாது.

2. கண் நோயாளிகள், அவர்களுக்கென்றே தனியாகத் துண்டு, ஆடைகள் முதலியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. புகை, புழுதி இருக்கும் பக்கம் நோயாளி போகக்

கூடாது.

4. கண்களைக் கழுவுவதற்குக் குளிர்ந்த நீரைப்

பயன்படுத்த வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/62&oldid=693241" இலிருந்து மீள்விக்கப்பட்டது