பக்கம்:நலமே நமது பலம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 61

5. கண்ணுக்குரிய சொட்டு மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி இட்டுக் கொள்ள வேண்டும்.

6. நல்ல உறக்கமும் ஓய்வும் அவசியம். பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்க்கு மேலே நாம் விளக்கமாகக் கூறியுள்ள நோய்கள் வரக்கூடும். பரவக் கூடும். இதனை முதலில் கண்டறிய வேண்டும்.

அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஆரோக்கியமான வழிகளில் நடந்து செல்ல, வாழ்ந்து கொள்ள, ஆசிரியர்கள் தான் அவசியமான நடவடிக்கைகளில் பணியாற்ற வேண்டும்.

பெற்றோர்கள் கூறுகின்ற அறிவுரைகளை விட ஆசிரியர்கள் காட்டுகின்ற நெறிமுறைகளை இவர்கள் நெஞ்சங்கள் ஏற்றுக் கொண்டு, நம்பிக்கையுடன் செயல்படு வதை நாம் கண்கூடாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே ஆசிரியர்களின் பங்கு இதில் பெரும் பங்காகத் திகழ்கிறது; தொடர்ந்து நிகழ்கிறது.

வருங்கால வளமான சமுதாயத்திற்கு ஆசிரியர் சமூகம் ஆன்ற பக்கத்துணையாக இருப்பதை அறிந்து ஆவன செய்தாக வேண்டும்.

அதுவே ஆத்மார்த்தமான சேவையாக அமைகின்றது. பெற்றோர்களின் பொறுப்பும் பெரிய பொறுப்பே. அவரவர் அறிந்து தங்கள் கடமைகளை ஆற்றினால், அதுவே அளவற்ற சமுதாயத் தொண்டாக அமைந்து விடும்.