பக்கம்:நலமே நமது பலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

6. e-Losboo &606 (Health Education)

உடல்நலக் கல்வி என்பது மக்களை நலத்தோடும் பலத்தோடும் வாழ்விக்கும் வழிவகைகளைக் கற்றுத் தருகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையை வெற்றி கண்டு, நோய்கள் அணுகாத மேதகு வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.

உடல்நலக் கல்வியானது மருத்துவக் கல்வி, நடத்தைக் கல்வி, உடல்கூறுகள், உடல் இயக்கம் பற்றிய கல்விகளின் சிறப்புக் கூறுகளைக் கொண்ட செழுமையான கல்வியாக உருவாகியிருக்கிறது. இதன் நோக்கம் மக்கள் அனைவரும் உடலால், மனதால், ஆத்மாவினால், சமூக வாழ்வு முறையால் சிறந்த வாழ்வு வாழ வேண்டும் என்று முயற்சித்துக் கற்பிப்பதுதான்.

தேவையும் சேவையும்:

வளர்ந்து விட்ட நாகரிக நாடுகளில், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், தினத்தாள்கள், புத்தகங்கள் எல்லாம் மக்களுக்கு உடல்நலம் பற்றிப் போதிக்கின்ற உணர்வுடன் உத்வேகமாகப் பணியாற்றி வருகின்றன.

மக்கள் என்ன சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? பற்களைப் பலப்படுத்திக் கொள்வது எப்படி? ஒய்வு நேரத்தை அனுபவித்து மகிழ்வது எப்படி? சுறுசுறுப்பாக வாழ்வது எப்படி? எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்? என்றெல்லாம் அறிவுரைகள் கூறுகின்றன. ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்கின்றன.

போதனைகள் அதிகம்தான், ஆனாலும் நோயால் அவதிப்படும் வேதனைகள் குறையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/64&oldid=693244" இலிருந்து மீள்விக்கப்பட்டது