பக்கம்:நலமே நமது பலம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 63

எனவே, உடல்நலக் கல்வி பற்றிய தேவை அதிகமாகிக் கொண்டே வருகிறது. உடல் நலத் திட்டங்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் உள்ளத்தில் பதியும் படி உரைக்க வேண்டிய கட்டாயம் பெருகிக் கொண்டே வருகிறது. உடல்நலக் கல்வியின் சேவை அனைவருக்கும் ஆறுதலை அளிக்கிறது, ஆனந்தத்தைக் கொடுக்கிறது.

-

பள்ளிகளில் உடல்நலக் கல்வி:

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் ஆவார்கள். நாளைய தலைவர்களை உருவாக்கும் நல்லதோர் பணியில் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எளிதில் நோய்கள் ஒட்டிக் கொள்ள, தொற்றிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன.

- சரியானபடி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காவிடில் அவர்கள் எதிர்கால வாழ்க்கை இருண்டு போகலாம். இன்னல் மிகுந்த சூன்ய வாழ்க்கையாகவும் மாறிவிடலாம்.

அப்படியெல்லாம் ஆகாமல், ஓர் அருமையான சுற்றுப்புற சுகாதார, சுகமான வாழ்க்கையைக் கொடுக்கக் கூடிய குணவான்களாகத் திகழ்பவர்கள் ஆசிரியப்பெரு மக்கள் என்றால் அது ஆச்சரியமான விஷயமல்ல.

உண்மையான, உறுதியான, நம்பிக்கையான

சேதியாகும்.

பகற்பொழுதில் ஏறத்தாழ 5 மணிநேரத்திற்கும் குறையா மல், குழந்தைகளுடன் ஒட்டி உறவாடி உலக விஷயங்களை விளக்குகிற உண்மை வழிகாட்டியாக, ஆசிரியர்களே விளங்குகின்றார்கள்.

நமது நாட்டில் உள்ள பெற்றோர்கள் கல்வி அறிவில்லா தவர்கள்; அவர்கள் எண்ணிக்கையில் அதிகம். கற்றவர்