பக்கம்:நலமே நமது பலம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 67

5. மாணவர்கள் பற்றி அவர்களின் பெற்றோர்களுக்கு அடிக்கடி நல நிலையைப் பற்றி செய்தி தெரிவிப்பதும் சிறந்த முறையாகும்.

மாணவர்கள் உடல்நலம் காக்க மேற்கூறிய செயல் முறைகள் மட்டும் போதிய அளவில் உதவாது. பள்ளி அமைந்திருக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலையும் இப்பணியில் பெரும்பங்கை வகிக்கிறது. -

பள்ளியின் அமைப்பும் நலத் திட்டங்களும் (Health Programmes):

1. விசாலமான பரப்பில் வெட்டவெளியான பிரதேசத்தில் பள்ளி நிலையங்கள் அமைந்திருப்பது நல்லது. எதிர்கால வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் எழிலார்ந்த கோயிலாகவே பள்ளிகள் பணியாற்று கின்றன என்பதால், பள்ளியின் இருப்பிடம் இயற்கை யான, மாணவர்க்கு ஆரோக்கியமான கல்வியையும் வாழ்வையும் வழங்கும் வரப்பிரசாதமாக அமைந்து விடும்.

2. ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் விளையாடுவதற்கு எப்போதும் திறந்தவெளி இடங்கள் நிறைய வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படும் வசதிகளில் தலையாயதொன்றாகும்.

விளையாட உதவும் ஆடுகளங்கள், உள்ளாடும் அரங் கங்கள், விளையாட்டுப் பூங்காக்கள், விளையாட்டுத் தோட்டங்கள் போன்றவை அமைந்திருந்தால் அத ஆன்ற கல்வியையும் ஆனந்தமான உடல் நலத்தையும் அளிக்கின்ற அற்புத இடமாகிவிடும்.