பக்கம்:நலமே நமது பலம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தூய காற்றோட்டமான இடம் வேண்டும் என்பது மட்டுமல்ல, தூய்மையான தண்ணிர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நல்ல சூரிய ஒளி வேண்டும் என்பது மட்டுமல்ல, உச்சி வெயில் நேரத்தில் ஒதுங்கி நிற்க, விளையாட நிழல் இருக்கிற வகையிலும் நேர்த்தியான அமைப்பினை ஏற்படுத்தி யாக வேண்டும். அது போலவே வகுப்பறைகளிலும்

காற்றோட்டம், மின்விளக்கு, காற்றாடி வசதி இருந்தால்

அயர்வில்லாமல் மாணவர்கள் கற்றுத் தேற முடியும்.

இயற்கையான வசதிகள் மட்டும் தேவை என்று இதுவரை கூறினோம். அவை போலவே மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்பட, பயன்படுத்திக் கொள்ளப் போதுமான நாற்காலி மேசைகள், பாடம் நடத்த உதவும் படங்கள், தேசப்படங்கள் விளக்கப் படங்கள் வேண்டிய அளவில் இருப்பது சிறப்பிற்குரிய தாகும்.

வானொலிப் பெட்டி தொலைக் காட்சிப் பெட்டி

போன்ற தகவல் சாதனங்களும் இருப்பின் மாணவர்க்கு

மிகுதியாக உதவி பயனளிக்கும்.

இருக்கின்ற வசதிகளை எடுப்பான வாய்ப்புகளாக ஏற்றுக் கொண்டு, ஏற்றமான வகையில் பயன்பெற பள்ளியை நடத்திச் செல்லும் பாங்கான திட்டங்களைத் தீட்டி, நெறிமுறைகளோடு செயல்பட வேண்டும். பள்ளிக்கான பாடவேளைத் திட்டங்கள் (Time Table Schedules), எந்தெந்த நேரத்தில் எந்தெந்த செயல்கள் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறபோது திறமையாக, செயல்பட முடியும்.