பக்கம்:நலமே நமது பலம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 69

விளையாட்டுகளுக்கும் வேண்டிய நேரத்தை ஒதுக்கு கிறபோது தான், கற்கின்ற மாணவர்களும் விறுவிறுப் புடன் செயல்பட்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

6. பள்ளியில் பணியாற்றுவதற்கென்று பகுதி நேர

அல்லது முழு நேர மருத்துவர்கள் இருப்பது நல்லது.

குறிப்பிட்ட நாட்களில் மருத்துவ பரிசோதனை செய்வது, வரும் முன்னே தடுக்கின்ற வல்லமையை வழங்குகிறது.

அத்துடன் முதலுதவி பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிப்பது நல்லது.

7. சுற்றுப்புற சூழ்நிலையை அசிங்கப்படுத்தாமல் சுத்தமாக இருக்க மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன் நின்று விடாமல், சுற்றுப்புறத்தை, கற்கும் வகுப்பைத் தூய்மைப்பிடுத்தும் பணியிலும் மாணவர்களை

ஈடுபடுத்திட வேண்டும்.

கழிவறைகளையும் தூய்மையாகப் பாதுகாத்து வைத்திருப்பது போன்ற உணர்வுகளைத் தெரிந்து கொள்ள மாணவர்களுக்குப் போதனை அவசியம்.

8. உடல்நலம் பற்றி, தூய்மை பற்றி, நோய்கள் பற்றி, மாணவர்கள் புரிந்து கொள்ள, கூட்டங்கள் போடு வதும் கருத்தரங்கம் நடத்தி அவர்களைப் பங்குகொள்ள வைப்பதும் பயனளிக்கக்கூடிய முயற்சிகளாகும். பள்ளிகள் கல்வி நிலையங்கள் மட்டும் இப்படிப்பட்ட முறையில், முயற்சிகளில் செயல்பட்டால் போதுமா?

மாணவ மாணவியர் அன்றாட வாழ்வில் வாழ்ந்து கொள்கிற சமுதாயச் சார்பிலும், உடல்நல இயக்கங்கள்