பக்கம்:நலமே நமது பலம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7Ο

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நடைபெற்றால்தான் இது முடியும். முன்னேற்றமும் அமையும். s

சமுதாய உடல்நலத் திட்டங்கள்:

1.

சமுதாயம் என்பது மக்கள் கூட்டம் மட்டுமல்ல;

சாலைகள், வீதிகள், வீடுகள், கடைகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பூங்காக்கள் எல்லாமும் தான். இவைகளும் தூய்மையாக இருக்க வேண்டுமல்லவா? அநாகரிகப் பழக்கங்களான கண்ட இடங்களில் காரித் துப்புதல், குப்பைகளை எறிதல், விரும்பிய இடங்களில் எல்லாம் மலஜலம் கழித்தல் போன்றவை பொல்லாத விளைவுகளையே ஏற்படுத்தும், என்பதால் துப்புரவு டனும் தூய்மையுடனும் வைத்துக் கொள்கிற முறைகளே சமுதாய உடல் நலத் திட்டங்களாகும்.

குடியிருக்கும் வீடுகள் கட்டுகிறபோதும் திட்டங்கள் தேவை. ஒழுங்கான அமைப்புக்கள், சாக்கடை செல்லக்கூடிய வசதிகள், தாராளமான காற்றோட்டம்

போன்றவற்றை அனுசரித்து வீடுகள் கட்ட வேண்டும்.

அதுவே திட்டமிட்ட சுகமான வாழ்க்கையைத் திரட்டித் தரும்.

மக்களுக்கு உடல் சக்தியை வளர்க்கக்கூடிய சத்துணவுத் திட்டம், போதுமான ஆடைகள் பெறத் திட்டங்கள் முதலியவற்றையும் வகுத்து வளம் கூட்ட வேண்டும்.

மக்களுக்குத் தூய்மையின் அவசியத்தைப் போதித்து,

பெறக்கூடிய நன்மைகளை அறிவுறுத்தி, வற்புறுத்தி நடைமுறைப்படுத்தல், எல்லோரும் சேர்ந்து தூய்மைப்