பக்கம்:நலமே நமது பலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 73

7. விபத்துக்களும் முதலுதவியும்

நிகழ்ச்சியும் விபத்தும்: -

திட்டமிட்டு எதிர்பார்த்து நடக்கிற காரியத்திற்கு நிகழ்ச்சி (Incident) என்று பெயர்.

எதிர்பாராமல் நடக்கிற எல்லா காரியத்திற்கும் அதாவது மனம் மற்றும் உடலை நோகச் செய்கிற எதற்கும் விபத்து (Accident) என்று பெயர்.

முதலுதவி

பள்ளிகளில் மாணவ மாணவியர்க்கு விளையாடும் போதும் சரி, வகுப்பறையிலும் சரி, மாடிப்படி ஏறி இறங்கும் போதும் சரி, சிறு சிறு விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பதுண்டு.

தேர்வு சமயங்களில் இரவில் கண்விழித்துப் படித்து விட்டுப் பள்ளிக்கு வருகிற மாணவ மாணவியரில் சிலர், பலவீனத்தின் காரணமாக மயக்கமடைந்து விடுவதுண்டு; விழுவதுண்டு.

வெயில் தாங்காமல், வரிசையில் நிற்கிறபோது மயங்கி விழுபவர்களும் உண்டு.

- அறிவியல் சோதனைக் கூடங்களில் அமிலங்கள் படுவதன் காரணமாக, புண்கள் ஏற்படுவதும், காயங்கள், வெட்டுகள் போன்றவை ஏற்படுவதும் உண்டு.

அப்படிப்பட்ட நேரங்களில், ஆபத்துக்களைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்து விடாமல், அறிவு குலைந்து போகாமல் தடுக்க, மருத்துவர் வந்து விபத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/75&oldid=693265" இலிருந்து மீள்விக்கப்பட்டது