பக்கம்:நலமே நமது பலம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உள்ளானவருக்கு உதவி செய்வதற்கு முன்னதாக எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கும் முன்னறிவுள்ள உதவிகளுக்கும் தான் முதலுதவி என்று பெயர்.

மருத்துவர் விபத்து நடந்த இடத்திற்கு வரும்வரை அல்லது மருத்துவ மனைக்கு விபத்துக்குள்ளானவரைக் கொண்டு செல்லும்வரை தற்காலிகமாக உதவுவதை நாம் முதலுதவி என்று கூறலாம்.

முதலுதவியும் முக்கிய குறிப்புகளும்:

விபத்துக்குள்ளானவருக்கு விரைவில் எந்த நிவாரணமும் செய்யாவிட்டால் அப்பொழுதோ அல்லது பின்னாளிலோ பெரும் ஆபத்து நேரலாம். அதனால் முதலுதவி பற்றி ஆசிரியர்கள் அல்லது பொதுமக்கள் அனைவரும் அறிந்து வைத்திருப்பது நல்லது. அவசியமானதும் ஆகும்.

ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஆர்வமுள்ள மாணவர்கள் சிலருக்கும் முதலுதவி பற்றிக் கற்பித்துக் கொடுத்திருப்பது காலத்தில் கை கொடுக்கும்; முக்கியமாக கவலைகளை மாற்றும். இதமான சூழ்நிலையையும் உண்டாக்கி சுமுகமாக்கிவிடும்.

1. விபத்து நேர்ந்து விடுகிறபோது குழப்பமோ கலவரமோ செய்யாமல் முதலுதவியை முடிந்தவரை உடனே செய்து விட வேண்டும்.

2. விபத்துக்குள்ளானவரைச் சுற்றி, வேடிக்கை பார்ப்பதற் காக கூட்டம் கூடிவிடும். அந்தக் கூட்டத்தைக் கலைத்து, காற்றோட்டம் வருமாறு செய்திட வேண்டும்.

3. மருத்துவமனைக்கு உடனே அவரை எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது மருத்துவரை உடனே விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.