பக்கம்:நலமே நமது பலம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எந்திரம் (Forceps), ஊசிகள், தூரிகை (Brush), கட்டும் மெத்தைகள் (Pads), டெட்டால், டிஞ்சர் அயோடின், கரண்டி, கண் சொட்டு மருந்து, பர்னால், போரிக் ஆயின்மென்ட் போன்றவை அவசியம் கைவசம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

7. /. மயக்கமும் உணர்வு இழத்தலும் (Fainting and Swooning):

உடலில் காயம் அடைகிறபோது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறபோது மயக்கம் ஏற்படும்.

மூளைக்குப் போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காத பொழுது அல்லது இருதயம் சரியாக இயங்குவதில் குழப்பம் ஏற்படுகிறபோது உணர்விழத்தல் ஏற்படுகிறது. அறிகுறிகள்: 1. முகம் வெளுத்துப் போகிறது. 2. சுவாசம் மெதுவாகிவிடுகிறது. சிலருக்கு சில

சமயங்களில் நடுக்கம் வலிப்பு போன்றவையும்

உண்டாகிவிடும். 3. வியர்த்துக் கொட்டுவது அதிகமாகி விடுவதும் உண்டு. முதலுதவிமுறை: 1. காற்றோட்டம் நன்றாக அவர் மேல் படுமாறு ஏற்படுத்த

வேண்டும். முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும். 3. கால் பாகம் உயர்ந்தாற்போல், தலைப் பாகம் தாழ்வாக

இருப்பது போல் படுக்க வைக்க வேண்டும்.

4. இறுக்கமாக இருந்தால் ஆடைகளைத் தளர்த்தி

விடுவது நல்லது.