பக்கம்:நலமே நமது பலம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆவியால் ஏற்படுகிற செம்புண்ணுக்கு, தேங்காய் எண்ணெய் அல்லது தெளிந்த சுண்ணாம்பு நீரைத் தடவலாம்.

ஏற்பட்ட தீக் காயம் ஆழமானதாக மோசமானதாக இருந்தால், மருத்துவரிடம் காட்டவும். பயத்தினால் காயம்பட்டவர் மயக்கமடைந்து இருந்தால், மூர்ச்சைத் தெளிவிக்க முயற்சித்தல் வேண்டும்.

தீக்காயங்கள் மேலும் வெடித்துப் பரவாமல் காத்திட வேண்டும். -

7. 3. @ge (Sprain):

திடீரென்று தடுமாறி விடுகிறபோதும் சறுக்கி

விழுகிறபோதும் எலும்புகள் இணைப்பு இடம் பெயர்ந்து கொள்வதால் சுளுக்கு ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

1.

வீக்கம் ஏற்படுவதும், வலிமிகுவதும் முதல் அறிகுறி.

2. சுளுக்கு ஏற்பட்ட பகுதியின் தோற்றத்தில் வேற்றுமை

தெரியும்.

3. சுளுக்கு ஏற்பட்ட உறுப்பினை அசைக்க முடியாது. அல்லது வழக்கம்போல் இயல்பாக இயக்கவும் முடியாது. முதலுதவிமுறை:

1.

சுளுக்கிக் கொண்ட பகுதியின் கீழ்ப்புறத்திலும் மேற். புறத்திலும் சிம்புகள் வைத்துக் கட்டுப் போட வேண்டும்.