பக்கம்:நலமே நமது பலம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. முறிந்த எலும் புறுப்பு தனது உரிய வடிவத்தை, அமைப்பை இழந்திருப்பதுடன், செயல்படுகின்ற ஆற்றலையும் இழந்திருக்கும். -

4. முறிந்த எலும்பு அமைப்பிழந்த தன்மை காணப்படும்.

5. முறிந்த எலும்பில் தோலுக்கு வெளியே துருத்திக்

கொண்டு தெரியும்.

6. முறிந்த எலும்பின் அசைவு பரிதாபமாக இருக்கும். அதை அசைக்கும் பொழுது அதிகமான வலியும் ஏற்படும்.

7. முறிவடைந்த இடத்தில் எலும்பின் இயக்கத்தில் சத்தம்

புதிதாக வெளிப்படும்.

8. முறிவு பற்றி அறிய அந்த எலும்பை அளந்து பார்த்தால்

முன்பு இருந்ததை விட நீளம் குறைவாகத் தெரியும்.

இவ்வாறு முறிவு பற்றி முதலுதவி செய்வது என்பது சற்று சிக்கலான சிரமம் நிறைந்த காரியம்தான்.

எலும்புமுறிவுக்கு உதவி:

எலும்பு முறிவுக்கு முதலுதவி செய்வது என்பது சற்று சிக்கலான சிரமம் நிறைந்த காரியம்தான்.

கற்றுத் தேர்ந்த மருத்துவர் கூட எந்த இடத்தில் முறிவு? என்ன வகையான முறிவு என்று கண்டு பிடிப்பதில் சிரமப்பட நேரிடும். எக்ஸ் ரே என்கிற ஊடுருவிக் கதிர் மூலமே கண்டறிய முடியும்.

ஆகவே முதலுதவி செய்கிறவர் எலும்பு முறிவுக்கு முன் வைத்தியம் செய்ய முனைகிறபோது, மிகவும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது இன்றியமையாத தாகும்.