பக்கம்:நலமே நமது பலம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - - 95

நெய்வேலி நகரைத் தாண்டியாயிற்று. அடுத்த ஊர் வடக்குக்குத்து என்று பெயர். அந்த ஊரையும் கடந்துபோய்க் கொண்டிருந்தபோத, எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது. என் வண்டியை உரசுவது போல வந்தது.

அதற்காக, வண்டியை இடதுபுறமாகத் திருப்பியபோது, உதிரே, விளக்குக் கம்பம் ஒன்று நின்று கொண்டிருக்க, மின்கம் பத்தில் மோதுவது போல வண்டி ஒதுங்கிற்று. இன்னும் கொஞ்சம் இடதுபுறம் ஒதுங்க வேண்டும்.

இடதுபுறமோ, சாலையில் இருந்து ஓரடிக்குள்ளாக, வீராணம் குழாய்கள் பதிப்பதற்காக, அகலமாக கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. கால்வாய்களை வெட்டிக் கொஞ்ச காலம் ஆகியிருந்ததால், ஏறத்தாழ மூன்று அல்லது நான்கடி ஆழமுள்ள பள்ளமாக, அதிகமான மேடு பள்ளமானதாக இருந்த தரைப் பரப்பிலே என் வண்டி இறங்கி ஓடிக் கொண்டிருந்தது.

இன்னும் கொஞ்சதூரம் இப்படியே ஓடினால் மேடு பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விடும் என்றதால், அதிலிருந்து தப்பிக்க பக்கவாட்டில் ஒருவேப்பமரம் நிற்பதைப் பார்த்தேன்.

மரத்தை நோக்கித் திருப்பிப் போவதற்குள்ளாக பிரேக் போட்டு நிறுத்தி விடலாம் என்று நினைத்து, திருப்பினேன். பிரேக்கை அழுத்தினேன். பிரேக் சரியாக வேலை செய்ய வில்லை.

ஆனால், அழுத்துவதில் மேலும் என் பலத்தைக் காட்டிப் பார்த்தேன். அதில் வெற்றி பெறுவதற்குள்ளாக வண்டி மரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சரி வேன் மரத்தில் மோதப் போகிறது. ஒட்டுகிற என் முன்பாகம்ஸ்டியரிங்குடன்ஜாம் ஆகப்போகிறது என்று முடிவு