பக்கம்:நலமே நமது பலம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

செய்து விட்டேன். மரணம் நிச்சயம் என்று உறுதி செய்து கொண்டவுடன், கடவுளையும் வேண்டி முடித்து விட்டேன்.

என் மனைவியும் டிரைவரும் அலறும் சத்தம் கேட்கிறது. வண்டியில் பிரேக் பிடித்தது போல் இருந்தது. ஆனாலும், வண்டி இன்னும் சில விநாடிகளில் மோதி விடும் என்று புரிந்து கொண்ட நான், கடவுளை வேண்டிக் கொண்டதுடன் சும்மா இருந்து விடாமல், ஆழ்ந்த மூச்சிழுத்து, தம் பிடித்துக் கொண்டு, வயிற்றால் ஸ்டியரிங்கை அழுத்திய வண்ணம், அதற்கு அடுத்ததாக நடக்கப் போகும் ஆபத்தைச் சந்திக்கத் தயாராகி விட்டேன். -

வேனின் முன் பாகம் மரத்தில்மோதியது. வயிற்றால் அழுத்திக் கொண்டிருந்ததால், நெஞ்சில் மோதல் இல்லை. அடுத்த வினாடிநான் தரையில் உருண்டு கொண்டிருந்தேன்.

மரத்தில் மோதிய வேகத்தில் வேன் கதவு திறந்து கொண்டதால், நான் வெளியே வீசப்பட்டேன். உருண்ட படியே, இருபது அடிதுரம் போய்க் கொண்டிருந்தேன். பின்புறமாக அமர்ந்திருந்த என் மனைவி, முன்னால் வந்து டிரைவர் சீட்டில் விழுந்தபோது அவளது இடதுகால் உட்புறம் பதிந்து நன்றாகச் சிக்கிக் கொண்டது. இடது சீட்டில் அமர்ந்திருந்த டிரைவரின் இடது கை ஒடிந்து விட்டது. முன்புறக் கண்ணாடி நொறுங்கிப் போனது. தண்ணிர்க் குழாய் உடைந்து முன்புறம் நசுங்கிப் போனது.

இந்த விபத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்தில் உள்ள குடிசைகளில் இருக்கின்ற பத்துப் பதினைந்து பெண்களும் ஆண்களுமாக, கையில் செம்புடன் பரக்கப் பரக்க ஓடி வந்தனர்.

கை ஒடிந்து போயிருக்கும் டிரைவருக்கும், என் மனைவிக்கும், குடிக்கத் தண்ணிர் கொடுத்தனர். முகத்தைக் கழுவிக் கொள்ளச் சொல்லினர்.