பக்கம்:நலமே நமது பலம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 97

பிறகு, டிரைவர் எங்கே என்று கேட்டபடி, தேடியபடி, விபத்துக்குள்ளான வேனைச் சுற்றிச் சுற்றி வந்தனர். டிரைவரைக் காணவில்லை என்றதும், வண்டிக்கு அடிப்புறத்திலும் முகம் வியர்க்க முணுமுணுத்தபடி தேடினர்.

அங்கே நான், எழுந்து நின்று தூசியைத் துடைத்துக் கொண்டு, இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என்னை நோக்கி வந்தனர்.

டிரைவர் எங்கே? பாவம்! அந்த டிரைவர் எங்கே!

ஏன் அப்படி தேடுகிறீர்கள்? என்ன வேண்டும்? அந்த டிரைவர் நான்தான் என்றேன். -

அவர்கள் நம்பவில்லை. அவர்கள் ஆச்சரியப் பார்வை. யாரோ அதிசயமான ஒரு மனிதனைப் பார்ப்பதுபோல் இருந்தது.

இங்கு அடிக்கடி இப்படித்தான் விபத்து நடக்கும். அப்போது டிரைவர் அந்த இடத்திலேயே செத்துப் போவார். இல்லையென்றால் அவர் உடம்பு இந்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொள்ளும். நாங்கள் வந்து கஷ்டப்பட்டு, தூக்குவோம். பல சமயங்களில் உடம்பைப் பிய்த்து பிய்த்து எடுப்பதுபோல்தான் இருக்கும். உங்களுக்கு ஒரு காயமும் இல்லேங்குறதைப் பார்த்துத்தான் ஆச்சரியப்பட்டுப் போனோம் என்று ஒருவர் விளக்கம் தந்தார்.

ஆமாம், நடந்தது ஒரு மேஜர் ஆக்சிடெண்டு. ஆனால்

மைனர் காயம் என்று சொன்னேன். வேனின் முன்பக்கம் சப்பை தட்டிப் போயிருந்தது.

இந்த விபத்து நடந்த நேரம் பகல் 2 மணி. பல விபத்துக்கள் பயங்கரமாக நடக்கும் இடம். இந்த இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/99&oldid=695000" இலிருந்து மீள்விக்கப்பட்டது