பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நலம் தரும்
நாட்டு மருந்ததுகள்


1. நோய்களின் கூறுகள்

நமது சரீரத்துக்கு இயற்கையின் கி.பதிப்படி பஞ்ச பூதங்களே ஆதாரமாக இருக்கின்றன. பஞ்ச பூதங்களாவ

பிருதிவி - மண்
அப்பு - நீர்
தேயு - நெருப்பு
வாயு - காற்று
ஆகாயம் - வெளி

நமது சரீரத்தில் மூன்று விதமான தன்மைகள் உண்டு. அவை வாதம், பித்தம், சிலேட்டுமம் எனப்படும்.

வாதம் வாயுவின் தன்மையையொத்தது.
பித்தம் தேயுவின் தன்மையையொத்தது.
சிலேட்டுமம் அப்புவின் தன்மையையொத்தது.