பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



நாடிச் சேர்க்கைகள்
வாதம் + வாதம்      = உடல் நெகிழ்ச்சியால்
                        சுருங்கும். 
                        உடல் பதறும். 
                        அன்னம் செல்லாது.

வாதம் + பித்தம்      = வாய் குழறும் 
                        கால் குளிரும் 
                        வீக்கம் உண்டாகும்.

வாதம் + சிலேட்டுமம் = உடல் வீங்கும், வலிக்கும்.
                        தலையிடிக்கும். குணங்கள் 
                        வெவ்வேறாகத் தோன்றும். 
                        அன்னம் இறங்காது.

பித்தம் + பித்தம்     = பிதற்றல், கிறுகிறுப்பு,
                        இளைப்பு இருக்கும். தேகம் 
                        வெளுக்கும். வீக்கம் உண்டு.

பித்தம் + வாதம்      = சுரம் இருக்கும். பிடறி 
                        காலில் குத்தும். மெய் குறுகும். 
                        புத்தி மடியும். கோபம் 
                        ஏற்படும்.

பித்தம் + சிலேட்டுமம் = வயிறு கோவும். தலை 
                         சுற்றும். வாய்நீர் ஒழுகும்.
                         வாய் குழறும், பிதற்றும். 
                         பித்தமெடுக்கும். பிடரி 
                         வலிக்கும்.